Published : 10 Nov 2022 06:16 AM
Last Updated : 10 Nov 2022 06:16 AM
மாணவர்கள் வகுப்பறையில் வந்து பாடம் கற்றது போய், இன்று கைப்பேசியில் கற்றுக்கொள்ளும் காலம் வந்துவிட்டது. நான் இங்கு சொல்வது ஜூம் வகுப்புகளை அல்ல. அனைத்து பாடங்களையும் இணையத்தில் டுட்டோரியல் வடிவில் படித்துக் கொள்ளும் வசதி இன்று வந்துவிட்டது. குறிப்பாக ஒரு மென்பொருள் புதிதாக வருகிறது எனில் அதனை எப்படிப் பயன்படுத்துவது, அதில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது போன்றவற்றை துல்லியமாக்க நமக்குக் கொடுத்து விடுகிறார்கள்.
புதிய கைப்பேசி வாங்கலாம் என்று அது பற்றி சமீபத்தில் இணையத்தில் தேடிய போது, அந்த தயாரிப்பு நிறுவனம் கூடக் கொடுக்காத பல தகவல்களை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்திருந்தனர் நெட்டிசன்கள். ஒரு சில காலகட்டங்களில், ஒரு சிலபுதிய தொழில்நுட்பங்கள், அனைத்தையும் புரட்டிப் போட்டுச் சென்றுவிடும். அப்படியான ஒன்றுதான் இந்த ‘டிக்டாக்’. இன்றுகளத்தில் இது இல்லை என்றாலும், செயல்பாட்டிலிருந்த கொஞ்ச நாட்களிலேயே, பலரையும் மீடியா வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது என்பதை மறக்கவும், மறுக்கவும் முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT