Published : 07 Nov 2022 06:17 AM
Last Updated : 07 Nov 2022 06:17 AM
மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதில் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடலுக்கு தயாரானது, வகுப்பறை. முதல் தலைப்பு, வீட்டிலிருந்து பள்ளி - பள்ளியிலிருந்து வீடு வந்து செல்லும்போது சந்திக்கும் பிரச்சினைகள். நெறியாளர் தயாரானார். நான் வகுப்பறைக்குப் பின்னே சென்று அமர்ந்து கொண்டேன். கைகள் உயர்ந்தன. நெறியாளர் கேட் நெறியாளர் தயாரானார். நான் வகுப்பறைக்குப் பின்னே சென்று அமர்ந்து கொண்டேன். கைகள் உயர்ந்தன. நெறியாளர் கேட்பதற்குள் பலரும் பேசத் தொடங்கினர். கையை உயர்த்தணும், கேட்பவர் மட்டுமே பதில் சொல்லணும் என்று நினைவூட்டிக் கொண்டே இருந்தேன்.
நேரத்துக்கு பஸ் வருவதில்லை; ஸ்டாப்பில் நிற்காமல் போகுது; பஸ்ஸில் கூட்டம் அதிகமா இருக்கு; புத்தகப்பை ரெம்பப் பெரிசு, தூக்கவே முடியல; பையோடு நிற்பது கஷ்டமா இருக்கு; பெரியவங்க இடிச்சுட்டு எங்களை திட்டுவாங்க; மரியாதையே இல்லாமல் திட்டுவாங்க; மழை பெய்தால் பஸ்பூரா ஒழுகும்; அவசரத்தில் மறதி வருது;சாலையைக் கடப்பது சிரமமா இருக்கு; பஸ் ஸ்டாண்டில் பெரிய பசங்க பணம் பறிக்குறாங்க; போதைப்பொருள் பயன்படுத்த றாங்க; பஸ் ஸ்டாண்டில் சண்டை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT