Published : 29 Jul 2022 06:34 AM
Last Updated : 29 Jul 2022 06:34 AM

தூத்துக்குடி | செல்போனை நல்லவற்றுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள்: பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் கீதா ஜீவன் அறிவுரை

தூத்துக்குடி திருச்சிலுவை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு சமூகநலத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் இலவச சைக்கிள்களை வழங்கினார். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: செல்போனை நல்லவற்றுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பள்ளி மாணவிகளுக்கு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவுரை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 139 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16,498 மாணவ மாணவிகளுக்கு இலவசசைக்கிள்கள் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளன. இந்த சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கும் விழா தூத்துக்குடி திருச்சிலுவை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சமூகநலன் மற்றும் மகளிர்உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மாணவிகள் தொலைக்காட்சி தொடர்களைப் பார்க்காதீர்கள். எந்ததொடரும் அறிவையோ, நல்லொழுக் கத்தையோ வளர்க்கும் வகையில் இல்லை.

செல்போன்களை மாணவிகள் நல்ல காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நம்மால் முடியும் என்ற நேர்மறை எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும். எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை நண்பர்களாக வைக்காதீர்கள். அது உங்கள் வளர்ச்சியை தடுத்துவிடும். சின்னச் சின்ன விஷயங்களுக்காக கவலைப்படாதீர்கள். உங்களை நல்வழிப்படுத்தவே ஆசிரியர்கள் கண்டிக் கிறார்கள்.

அது நமது உயர்வுக்கான அறிவுரை என ஏற்றுக் கொள்ள வேண்டும். அது உங்களை நல்ல மனி தர்களாக உயர்த்தும். உங்களுக்கு எந்த மாதிரியான பிரச்சினை என்றாலும் ஆசிரியர்களிடம் கூற வேண்டும். இல்லையெனில் 1098 என்ற கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். மாணவிகள் தங்கள் பிரச் சினைகள் குறித்து புகார் தெரிவிக்க ஒருபோதும் தயங்கக் கூடாது.

இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, வட்டாட்சியர் செல்வக் குமார், பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி ஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x