Published : 20 Jul 2022 06:28 AM
Last Updated : 20 Jul 2022 06:28 AM

தானிய உணவு பதார்த்தங்கள் செய்வது எப்படி? - பள்ளி மாணவிகளுக்கு செயல்முறை பயிற்சி

தூத்துக்குடி திருச்சிலுவை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறுதானிய பதார்த்தங்கள் செய்வது குறித்த செயல்முறை விளக்கத்தை ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவிகள்

தூத்துக்குடி: சிறுதானிய உணவு பதார்த்தங்கள் தயாரிப்பது எப்படி? என்பது குறித்து தூத்துக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

உணவு பாதுகாப்புத் துறை சார்பில் தூத்துக்குடி திருச்சிலுவை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறுதானிய உணவு பாதார்த்தங்கள் செய்வது குறித்த செயல்முறை விளக்க முகாம் நடைபெற்றது.

உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் ரூபி பெர்னாண்டோ, திலகா, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானம் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x