Published : 14 Jul 2022 06:20 AM
Last Updated : 14 Jul 2022 06:20 AM

திருவாரூர் | போதிய வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

போதிய வகுப்பறை இல்லாததால் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் மாணவர்கள். (அடுத்த படம்) சேதமடைந்த நிலையில் உள்ள சத்துணவுக்கூடம்.

திருவாரூர்: திருவாரூர் அருகே பவித்திரமாணிக் கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதிய கட்டிட வசதிகள் இன்றி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பாடம் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளிக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் இலவங்கார்குடி ஊராட்சி பவித்திர மாணிக் கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள இந்தப் பள்ளியில், காட்டூர், பவித்திரமாணிக்கம், இளவரங்கார் குடி, பெரும்புகலூர், தொழுவனங்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 430 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மொத்த மாகவே 7 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன.

ஒரு வகுப்பறைக்கு 40 பேர்மட்டுமே அமர்ந்து படிக்க இடவசதி உள்ள நிலையில், ஒவ்வொரு வகுப்பறையிலும் 50-க்கும்மேற்பட்ட மாணவர்கள் அமர வைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக 8-ம் வகுப்பு மாணவர் களுக்கு வகுப்பறை கட்டிடம் இல்லை. அவர்களுக்கு மரத்தடியில்தான் 8-ம் வகுப்பு நடக்கிறது. மழை வரும் நேரங்களில் பள்ளியின் வராண்டாவிலும், அருகில் உள்ள காளியம்மன் கோவில் அல்லது நூலகத்திலும் மாணவர்கள் அமர வைக்கப்படுகின்றனர்.

பள்ளியில் உள்ள சத்துணவு கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தின் மேற்பகுதி சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. தளவாடப் பொருட்களை வைப்பதற்காக அமைக்கப்பட்ட லாப்டர் சிலாப் எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது.

எனவே சத்துணவு கூடத்தை உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு சரிசெய்யவும், மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டவும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோரும், ஆசிரியர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் சுரேஷ், ராஜேஷ் ஆகியோர் கூறும்போது, வகுப்பறை இல்லாமல் மரத்தடியிலும் அருகில் உள்ள கோயில்களிலும் அமர்ந்து படிப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. படிப்பில் உரிய கவனம் செலுத்த முடியவில்லை" என்றனர். பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக மாவட்ட ஆட்சியருக்கு ஏற்கனவே கோரிக்கை மனு அளித்திருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவல கத்தில் விசாரித்தபோது, நபார்டு திட்டத்தின் கீழ் நிதி வர இருக்கிறது. அந்நிதியில், அதிக எண்ணிக்கை உள்ள பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட முன்னுரிமை அளிக்கப்படும்" என்று விளக்கம் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x