Published : 28 Oct 2022 06:10 AM
Last Updated : 28 Oct 2022 06:10 AM

தேசிய கல்வி உதவித் தொகை: அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய வருவாய் மற்றும் தகுதியுடன்கூடிய கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 2022-23-ம்ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித் தொகை பெறுவதற்கு வரும் 31-ம் தேதிக்குள் www.scholarships.gov.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய 8-ம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் அந்தந்த மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. பெற்றோர் வருமானம் ஆண்டுக்கு ரூ.3.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான தேர்வில் 55 சதவீத மதிப்பெண்கள் அல்லது 7-ம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x