Published : 28 Oct 2022 06:08 AM
Last Updated : 28 Oct 2022 06:08 AM

புதுமைப்பெண் உதவித்தொகைக்கு விண்ணப்பம்: நவ.1 முதல் 11 வரை அவகாசம்

காஞ்சிபுரம்: புதுமைப்பெண் உதவித்தொகையை பெறுவதற்கு மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேற்படிப்பு மற்றும் தொழிற்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை கடந்த செப்.5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இதுவரை கல்லூரியில் 2, 3மற்றும் 4-ம் ஆண்டு பயிலும்1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் உதவி தொகையை பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு கல்லூரி முதலாம் ஆண்டு மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ம் தேதி முதல்11-ம் தேதி வரை www.pudhumaipenn.tn.gov.in என்ற வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவர். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை, கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS NO, மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது கல்லூரி 2,3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தவறி இருந்தால் தற்போது விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருந்தால் சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை அணுகலாம். இம்மையம் வார நாட்களான திங்கள் - வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 வரை செயல்படும். மேலும் விவரங்களுக்கு 91500 56809,91500 56805,91500 56801, 9150056810 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். மேற்படிப்பு மற்றும் தொழில் நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் தவறாமல் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x