Published : 28 Oct 2022 06:56 AM
Last Updated : 28 Oct 2022 06:56 AM

உலகின் நம்பர் 1 பாசுமதி அரிசி - இந்தியா கேட் பிராண்டுக்கு அங்கீகாரம்

புதுடெல்லி: நறுமணம், தனித்துவமிக்க சுவை உள்ளிட்ட சிறப்பம்சங்களுக்காக இந்தியா கேட் பிராண்ட் பாசுமதி அரிசிக்கு உலகின் நம்பர் 1 அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மோர்டோர் இன்டெலிஜென்ஸ் ஆய்வில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய-பசிபிக், மத்திய கிழக்கு & ஆப்பிரிக்க கண்டங்களில் வெள்ளை மற்றும் பழுப்பு நிற பாசுமதி
அரிசி வகைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், இந்தியாவின் கேஆர்பிஎல் நிறுவனத்தின் இந்தியா கேட் உலகின் நம்பர் 1 பாசுமதி அரிசி பிராண்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதிக தரம், பிரீமியம் தோற்றம், தனித்துவமான சுவை ஆகியவற்றுக்காக இந்தியா கேட் பாசுமதி அரிசிக்கு உலக அளவில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, இந்தியா கேட் பிராண்டின் பாசுமதி அரிசி வகைகள் 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும், ஆண்டுக்கு 8 கோடிக்கும் அதிமான பாசுமதி அரிசி மூட்டைகள் இந்தியா கேட் பிராண்டின் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

பொதுவாக இந்தியாவில் சில்லறை சந்தையில் பிராண்ட் செய்யப்படாத பாசுமதி அரிசி வகைகளே ஏராளமாக விற்பனையாகி வருகின்றன. இந்த நிலையில், பாசுமதி அரிசிக்கான பிராண்டை தனித்துவமாக அடையாளப்படுத்துவதன் மூலம் கேஆர்பிஎல் நிறுவனம் கணிசமான வளர்ச்சியை எட்ட திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஆர்பிஎல் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அனில் குமார் மிட்டல் கூறுகையில். “நுகர்வோருக்கு தரமான தயாரிப்புகளை தர வேண்டும் என்பதில் நிறுவனம் நிபந்தனையற்ற அர்ப்
பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. அதனை அங்கீகரிக்கும் வகையில் பாசுமதி அரிசியின் பிரீமியம் தரத்துக்காக இந்தியா கேட் பிராண்டுக்கு உலகின் நம்பர் 1 அந்தஸ்தும், பாராட்டும் கிடைத்துள்ளது. நுகர்வோரிடையே தேவை அதிகரித்து வருவதையடுத்து தற்போதுள்ள 3 லட்சம் சில்லறை விற்பனையகங்களின் எண்ணிக்கையை 5 லட்சமாக அதிகரிக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

கேஆர்பிஎல் இந்தியாவின் முதல், ஒருங்கிணைக்கப்பட்ட அரிசி நிறுவனமாகும். 130 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்ட இந்நிறுவனம் மணிக்கு 195 மில்லியன் டன் அரிசியை பதப்படுத்தும் செயல்திறனைக் கொண்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x