Published : 12 Sep 2022 06:14 AM
Last Updated : 12 Sep 2022 06:14 AM

கால்நடை மருத்துவ படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பம் விண்ணப்பம்

சென்னை: சென்னை, நாமக்கல், உட்பட 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் கால்நடை மருத்துவ பட்டப் படிப்பில் 580 இடங்கள் உள்ளன.

திருவள்ளூர் கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பிடெக் (உணவு தொழில்நுட்பம்) படிப்பில் 40 இடங்களும், பிடெக் (பால்வள தொழில்நுட்பம்) படிப்பில் 40 இடங்களும் ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும்மேலாண்மைக் கல்லூரியில் பிடெக் (கோழியின தொழில்நுட்பம்) படிப்பில் 40 இடங்களும் உள்ளன.

இப்படிப்புகளில் நடப்பு கல்வி ஆண்டில் சேர பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல் 26-ம் தேதி வரை ஆன்லைனில் (https://adm.tanuvas.ac.in) விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x