Published : 06 Jul 2022 06:50 AM
Last Updated : 06 Jul 2022 06:50 AM

சென்னையின் எஃப்சியில் 2 தமிழக வீரர்கள் சேர்ப்பு

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில்சென்னையின் எஃப்சி அணியில் தமிழகத்தைச் சேர்ந்தலிஜோ பிரான்சிஸ்மற்றும் ஜாக்சன்தாஸ் ஆகியோர்சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண்டுகள்ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. நடுகள வீரரானஜாக்சன் தாஸ், கன்னியாகுமரி மாவட்டம் வாளவிளையைச் சேர்ந்தவர். டிபன்டரானலிஜோ பிரான்சிஸும் அதே மாவட்டத்தைச்சேர்ந்தவர்தான். இறைவிபுத்தன்துறையை சேர்ந்தஅவர், ஸ்பெயினில் உள்ள ஏடிஅல்கார்கான் கிளப்பில் ஒரு மாத காலம்பயிற்சி பெற்றுள்ளார்.

ஜாக்சன் தாஸ், லியோ பிரான்ஸிஸ்ஆகியோர் ஐ-லீக் தொடரில்சென்னை சிட்டிஅணிக்காக இருசீசன்களில் இணைந்து விளையாடி உள்ளனர். கடைசியாகஇவர்கள் ஐ-லீக் 2-வதுடிவிஷன் அணியானமதன் மகாராஜ்அணியில் விளையாடியிருந்தனர். 22 வயதான லியோபிரான்ஸிஸ் 11 ஆட்டங்களில் விளையாடி ஒரு கோல்அடித்துள்ளார்.

லியோ பிரான்ஸிஸ்கூறும்போது, “ சென்னையின் எஃப்சிகுடும்பத்தில் இணைவதில்மகிழ்ச்சி அடைகிறேன், ரசிகர்களின் முன்னிலையில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளேன். ஐஎஸ்எல் தொடரில் ஒரு கிளப்பில் விளையாடுவது இதுவே முதல்முறை, வரவிருக்கும்சீசனை ஆவலுடன்எதிர்பார்க்கிறேன்” என்றார்.

2019-ல் தனதுகால்பந்து வாழ்க்கையைஐ-லீக்கின்சென்னை சிட்டிஅணியுடன் தொடங்கியஜாக்சன் தாஸ் 32 ஆட்டங்களில் விளையாடி 2 கோல்கள் அடித்துள்ளார். சுவாரஸ்யமாகஇந்த இருகோல்களும் சென்டர்ஃபார்வர்டு வீரராக அடித்திருந்தார். ஏஎஃப்சி கோப்பைக்கானஆட்டத்தில் சென்னை சிட்டி அணிக்காகவும் ஜாக்ஸன்தாஸ் விளையாடிஉள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x