Published : 05 Jul 2022 06:24 AM
Last Updated : 05 Jul 2022 06:24 AM
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கி வருகிறது. அதன் விவரம் வருமாறு:
l ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளுக்கும் மதிய உணவு
l ஆண்டுக்கு 4 ஜோடி சீருடைகள்
l பாடப்புத்தகங்கள்
l நோட்டுகள்
l ஸ்கூல் பேக்
l ஒன்று மற்றும் 2-ம் வகுப்பு குழந்தைகளுக்கு கிரையான்கள்
l மூன்று முதல் 5-ம் வகுப்பு வரை வண்ண பென்சில்கள்
l ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜியாமெட்ரி பாக்ஸ்
l ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அட்லஸ்
l ஒன்று முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலணி
l ஆறு முதல் 8-ம் வகுப்பு வரை ஷூ மற்றும் சாக்ஸ்
l மலைப்பகுதிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உலன் ஸ்வெட்டர்
l மலைப்பகுதிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பூட்ஸ் மற்றும் சாக்ஸ்
l மலைப்பகுதிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு ரை ரெயின் கோட்
l 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்.
l 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக் கணினி (லேப் டாப்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT