

பெய்ஜிங்:
அமெரிக்கா - சீனா இடையே நிகழும் வர்த்தகப்போர் காரணமாக சீனாவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள இடைவெளியால் மீண்டும் வறுமையை நோக்கிச் செல்கிறது என்று ‘திங் டாங்க்’ வேளாண் அமைச்சகத்துடன் தொகுத்த அறிக்கை கூறுகிறது.
கிராமப்புற வருமானம் 2014-ம் ஆண்டில் இருந்து சரிந்து முதல் அரையாண்டில் 20% வீழ்ச்சி அடைந்துள்ளது என்று கூறுகிறது பெய்ஜிங் ஓரியண்ட் அக்ரிபிஸினஸ் ஆலோசகரின் அறிக்கை. “கிராமப்புறங்கள் வறுமைக்கு திரும்பும் இந்த நடப்பு நிலவரம் நம்பிக்கை அளிப்பதாக இல்லை” என எச்சரித்துள்ளார் பெய்ஜிங் ஓரியண்ட் அக்ரிபிஸினஸின் ஆய்வாளர் மா வென்ஃபெங்.
2018 வரையில் மொத்தம் ஆறு ஆண்டுகளில் 8.3 கோடி கிராமவாசிகளை வறுமையில் இருந்து மீட்டுள்ளது என்கிறது ஸின்ஹுவா செய்தி நிறுவனத்தின் அறிக்கை. அடுத்த ஆண்டில் முற்றிலும் வறுமை அகற்றப்படும் என்று உறுதி கூறினார் சீனா அதிபர் ஜி ஜின்பிங்.-பிடிஐ