Published : 15 Oct 2019 11:28 AM
Last Updated : 15 Oct 2019 11:28 AM

ஜிம்னாஸ்டிக்கில் உலக சாதனை

- படம்: ஏஎப்பி 

ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கார்ட் நகரில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்களுக்கான பிரிவில் நடந்த அபாரட்டஸ் பிரிவில் சாகசங்களைச் செய்து அசத்துகிறார் அமெரிக்க வீராங்கனையான சிமோன் பில்ஸ். இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் மொத்தம் 5 தங்கப்
பதக்கங்களை வென்றார்.

இதன்மூலம் உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை அவர் பெற்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது. இது உலக சாதனையாகும்.

இதற்கு முன்னர் பெலாரஸ் வீராங்கனையான விடாலி ஷெர்போ உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 23 பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்தது. இப்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகிறார் சிமோன் பில்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x