Published : 28 Jun 2023 04:10 AM
Last Updated : 28 Jun 2023 04:10 AM

எம்பிபிஎஸ். பிடிஎஸ் சேர இன்று முதல் விண்ணப்பம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று (புதன்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் சாந்திமலர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: நடப்பு கல்வி ஆண்டில் (2023-2024) அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அதேபோல், அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்பு மற்றும் தனியார் பல்மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜுன் 28-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு தொடங்கி, ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. மாணவர் சேர்க்கை தகவல் தொகுப்பு மற்றும் இதர விவரங்களை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் எம்பிபிஎஸ் படிப்பில் 5,175 இடங்கள் இருக்கின்றன. அதேபோல், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 3050 இடங்கள் கிடைக்கும். பிடிஎஸ் படிப்பில் 2 அரசு பல்மருத்துவக் கல்லூரிகளில் 200 இடங்கள் உள்ளன. தனியார் பல்மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,960 இடங்கள் கிடைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x