Published : 28 Jun 2023 06:12 AM
Last Updated : 28 Jun 2023 06:12 AM

நித்தியானந்தாவின் பெண் சீடர்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் வழிகளை கண்டறிய வேண்டும் - மத்திய அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தல்

அகமதாபாத்: சாமியார் நித்தியானந்தாவின் சீடராக சென்ற சகோதரிகளான இரண்டு பெண்களையும் மீட்டுத்தரக்கோரி அவரது தந்தையின் சார்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு நீதிபதி உமேஷ்திரிவேதி அடங்கிய அமர்வு முன்னிலையில் நே்ற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது,அந்த பெண் சகோதரிகள் ஏன் இந்திய தூதரகத்திலிருந்து வீடியோகான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் பேச விரும்பவில்லை என்று கேள்விஎழுப்பினார்.

இதற்கு அந்த பெண்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிபி நாயக், தந்தையைப் பார்த்துஅந்தப் பெண்கள் பயப்படுவதாகவும், அப்படி ஆஜராகும்பட்சத்தில் அவர்களது முகவரியை கண்டுபிடிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு நீதிபதி, “குற்ற உணர்வினால்தான் அந்த சகோதரிகள்விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர்கள் இருவரையும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து மத்திய அரசின் வழக்கறிஞர் ஷிதிஜ் அமீனிடம் கேள்வியெழுப்பினார்.

இதற்கு மத்திய அரசு வழக்கறிஞர், ஜமைக்காவுடன் இந்தியாவுக்கு நாடு கடத்தல் ஒப்பந்தம்இல்லை. ஆனால், சட்ட உதவிக்கான ஒப்பந்தம் உள்ளது என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, அந்த பெண் சீடர்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான வழி முறைகளை மத்திய அரசு கண்டறிய வேண்டும். வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறி வித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x