Published : 20 Jun 2023 05:10 AM
Last Updated : 20 Jun 2023 05:10 AM

ஒரு மணி நேரத்தில் 108 முறை சூரிய நமஸ்காரம்: விருதுநகர் மாணவர்கள் சாதனை

விருதுநகரில் உள்ள ஸ்ரீவித்யா பள்ளி கலையரங்கில் சூரிய நமஸ்காரம் செய்த மாணவ, மாணவிகள்.

விருதுநகர்

விருதுநகரில் பள்ளி மாணவர்கள் 200 பேர் ஒரு மணி நேரத்தில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து ஆஸ்கார் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி பின்பற்றப்படுகிறது. இதையொட்டி விருதுநகரில் உள்ள ஸ்ரீவித்யா பள்ளி கலையரங்கில் மாணவ, மாணவிகள் 200 பேர் பங்கேற்ற யோகாசன சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு விருதுநகர் யோகா சங்கச் செயலாளர் ரேணு ராம்பால் தலைமை வகித்தார். விருதுநகரில் உள்ள 5 பள்ளிகளைச் சேர்ந்த 3-ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் 200 பேர் பங்கேற்றனர். 1 மணி நேரத்தில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து ஆஸ்கார் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர். ஆஸ்கார் உலக சாதனை பார்வையாளர் கதிரவன் முன்னிலை வகித்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 50 பேர் 1 மணிநேரம் 40 நிமிடங்களில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து ஆஸ்கார் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x