Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

காரைக்காலுக்கு அமித் ஷா நாளை வருகை

காரைக்காலில் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (பிப்.28) காரைக்காலுக்கு வருகிறார்.

காரைக்கால் சந்தைத் திடலில் நாளை (பிப்.28) பாஜகசார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.

கூட்டத்துக்குப் பின்னர், பகல் 1 மணிக்கு கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x