Published : 11 Dec 2020 07:29 AM
Last Updated : 11 Dec 2020 07:29 AM

ரஜினி கட்சியுடன் கூட்டணியா?மதுரையில் மு.க.அழகிரி கருத்து

மதுரை: ரஜினி கட்சியுடன் கூட்டணி குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.

மதுரை அழகர்கோவில் அருகே திருமண விழாவில் பங்கேற்ற மு.க.அழகிரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சி தொடங்குவதும் ஒரு பங்களிப்புதான். ஏன் வாக்களிப்பதுகூட ஒரு பங்களிப்புதான். தேர்தலில் என்ன செய்யலாம் என ஆலோசனைக் கூட்டம் நடத்திய பின்பு முடிவு செய்வோம் எனத் தெரிவித்திருந்தேன். எப்போது ஆலோசனை நடத்தலாம் என ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டதும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டேன். அவரது கட்சியுடன் கூட்டணி குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. வாய்ப்புக் கிடைத்தால் ரஜினியுடன் நடிக்க வேண்டுமானால் செய்வேன் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x