Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM

சிதம்பரம் தொகுதியில் 50 ஆண்டு கால கனவை நிறைவேற்றித் தந்த அம்மாவின் அரசு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் பெராம்பட்டு - திட்டுகாட்டூர் இடையே ரூ.20 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் தந்து அப்பகுதி மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி தந்த பெருமை அதிமுகவிற்கு தான் உண்டு என்று அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே,ஏ.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட திட்டுகாட்டூர், கீழ குண்டலபாடி, மற்றும் அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் உள்ளிட்ட கிராமங்கள் கொள்ளிடம் மற்றும் பழைய கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே கடலில் சங்கமிக்கும் இடத்தில் தீவு போல் அமைந்துள்ளது. மேற்கண்ட கிராமங்களில் சுமார் 850 க்கும்மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3,500 க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் விவசாய விளை பொருட்களை எடுத்து செல்லவும், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கொள்ளிடம் ஆற்றில் கட்டபட்ட தரை பாலத்தை தற்போது வரை பயன்படுத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் மழை, வெள்ள காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போதும்,காவிரி ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின்போதும் கூடுதல் நீர் கொள்ளிடத்தில் திறப்பதால் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கின் போதும் பழைய தரைப்பாலம் முற்றிலும் மூழ்கிவிடுவதுண்டு. இதனால், இக்கிராம மக்கள் அனைவரும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து தொடர்பின்றி முற்றிலும் துண்டிக்கப்படுவர். இச்சமயங்களில் படகுகள் மூலம் இக்கிராம மக்களை மீட்டு, அருகில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படுவர்.

ரூ.19.50 கோடியில் உயர்மட்டப் பாலம்

ஆண்டு தோறும் புயல் மற்றும் மழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மீண்டு, பிற பகுதிகளுக்குச் செல்ல ஏதுவாக ஒரு உயர் மட்ட பாலம் கட்டி தர வேண்டும் என்று மேற்கண்ட கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுவினை அளித்தனர். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மற்றும் தமிழக அரசின் சட்டம்,நீதிமன்றங்கள், சிறைசாலைகள் மற்றும்கனிம வளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம்கோரிக்கையை அளித்தேன். எனது கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் கனிம அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ.19.50 கோடி நிதி ஒதுக்கி மேற்கண்ட பெராம்பட்டு – திட்டுகாட்டூர் கிராமங்களை இணைக்கும் சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட பாலம் வேலை தற்போது நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்தபொதுமக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவு செய்த அரசு, அம்மாவின் அரசு. தடுப்பணைக்கு நிதி மேலும் சிதம்பரம் பகுதி வேளாண் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உட்புகுதலை தடுக்கும் வகையில் திருக்கழிப்பாலை கிராமத்தில் தடுப்பணை அமைப்பதற்கு நில அளவை பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் தொகுதியின் ஆதிவராக நல்லூர் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிகள் ரூ. 95 கோடி மதிப்பீட்டில் விரைவில் தொடங்கப்படும்.

சிதம்பரம் தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் அகரநல்லூர் கிராமத்தில் பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடி மதிப்பில் கனிம வள நிதியில் இருந்து தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதுபோல் அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் இடது கரையில் ரூ.15 கோடி மதிப்பில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

கடல் நீரைத் தடுக்க

சிதம்பரம் தொகுதி பிச்சாவரம் கிராமத்தில் கடல் நீர் உட்புகுதலை தடுக்க உப்பனாறு வடிகாலின் குறுக்கேகடைமடையில் ரூ.15 கோடி மதிப்பில் ஒழுங்கியம் கட்டும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

மேலும், சிதம்பரம் வட்டம் பெராம்பட்டு மற்றும் கீழகுண்டலபாடி கிராமத்திற்கு அருகே பழையகொள்ளிடம் ஆறு சங்கமிக்கும் இடத்தில் ரூ.43 கோடி மதிப்பில் வெள்ள தடுப்புநடவடிக்கையாக ரெகுலெட்டர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்று சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x