Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

உடற்கல்விஇயக்குநர்கள்பதவி உயர்வு

சென்னை

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் பதவி உயர்வுக்கான பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உடற்கல்வி இயக்குநராக (கிரேடு-2) பதவி உயர்வு வழங்குவது தொடர்பான பெயர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இப்பட்டியல், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையிலும், பணிவரன்முறை, தகுதிகாண் பருவம் ஆகியவற்றின் அடிப்படையிலும் இந்த தற்காலிகபெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் ஏதும் இருப்பின் அதை உரிய இடத்தில் சேர்க்க ஏதுவாக இதுதொடர்பான பரிந்துரையுடன் 30-ம் தேதிக்குள் (இன்று) அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x