Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM

விவசாய நகைக்கடன் கட்டணத்தை குறைக்கக் கோரி வங்கியை முற்றுகை விவசாய அமைப்பினர் 23 பேர் கைது

நாகர்கோவிலில் விவசாய நகைக்கடனுக்கான சேவைக் கட்டணத்தை குறைக்கக்கோரி, வங்கியை நேற்று முற்றுகையிட முயன்ற விவசாய அமைப்பினர் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கான நகைக்கடனுக்கான சேவைக் கட்டணம் உயர்த்தப்பட்டதையும், மானியம் ரத்து செய்யப்பட்டதையும் கண்டித்து, மாவட்டம் முழுவதும் உள்ளதேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை நேற்று முற்றுகையிடப் போவதாக, குமரி மாவட்ட பாசனத்துறை மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகர்கோவில், தக்கலை, குளச்சல் பகுதிகளில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நேற்று காலை, நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சந்திப்பில் இருந்து, அப்பகுதியில் உள்ள கனரா வங்கியை முற்றுகையிடுவதற்கு, குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் பூமிபாதுகாப்பு சங்க தலைவர் பத்மதாஸ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து மற்றும் விவசாய அமைப்பினர் ஊர்வலமாக வந்தனர். அவர்களை வழியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது கோஷமிட்டவாறு சாலையில் அமர்ந்து விவசாய அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மறியல் செய்த 23 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x