Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

வரும் சட்டப்பேரவை தேர்தலில் ரஜினி கட்சி வேட்பாளருக்கு வாக்களியுங்கள் நாகையில் வீடு வீடாகச் சென்று சுய உதவிக்குழு பெண்கள் பிரச்சாரம்

ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சியின் வேட்பாளருக்கே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களியுங்கள் என்று நாகை அக்கரைக்குளம் பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர்.

நாகப்பட்டினம்

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அவரது ரசிகர்கள், ரஜினி மக்கள் மன்றத்தினர் விரும்பு கின்றனர். இந்நிலையில், ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் வேட் பாளருக்கு சட்டப்பேரவை தேர்தலில் வாக்களியுங்கள் என்று நாகையில் நேற்று மகளிர் சுய உதவிக் குழுவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

நாகை அக்கரைக்குளம், மருந்து கொத்தளத் தெரு, கோட்டை வாசல் படி, கீரைக்கொல்லைத் தெரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்ற அவர்கள், ரஜினி காந்த் விரைவில் தொடங்க வுள்ள கட்சியின் வேட்பாளருக்கே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே மகளிர் சுய உதவிக் குழுவினர் நேற்று பிரசாரம் செய்தது நாகை யில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினிக்கு இதுதான் சந்தர்ப்பம்: தமிமுன் அன்சாரி கருத்து

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நேற்று நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் கேள்விக்குறி யாகவே உள்ளது. ஆன்மிகவாதியாகவும், தனிமை விரும்பியா கவும் உள்ள ரஜினிகாந்த்தால் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாது. இந்த சந்தர்ப்பத்தையும் ரஜினி நழுவவிட்டால் இனி அவர் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகளே இல்லை. தமிழக மக்களின் எதிர்ப்புக்கு பயந்தே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மசோதாவில் ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார். இதற்காக, துணிச்சலாக தமிழக முதல்வர் அரசாணை வெளியிட்டது பாராட்டுக்குரியது. தீபாவளியையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x