Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

மலையடிவாரப் பகுதியில் இலவச பட்டா வழங்க எதிர்ப்பு கோவில்பட்டி அருகே ஜேசிபியை கிராம மக்கள் சிறைபிடிப்பு

கோவில்பட்டி அருகே தோணுகால் மலையடிவாரப் பகுதியில் இலவச பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி அருகே தோணுகால், படர்ந்தபுளி, கங்கன்குளம் ஆகிய கிராமங்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர். தோணுகால் அருகே 200 ஏக்கர் பரப்பளவில் மலை உள்ளது. இதில் அரியவகை மூலிகைச் செடிகள், மான், முயல் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன.

மலையடிவார ப்பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறு அமைத்துதோணுகால் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இக்கிராம மக்கள் மலையடிவாரப் பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

தோணுகால் மலையடிவாரப் பகுதியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் 320 பேருக்கு இலவசவீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இடத்தை அளந்துவழங்குவதற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் ஏற்கெனவே இரண்டு முறை வந்தபோது, கிராம மக்கள்எதர்ப்பு தெரிவித்ததால் திரும்பிச்சென்றனர். இந்நிலையில், நேற்று வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் தோணுகால் மலையடிவாரப் பகுதியில் உள்ள மரங்கள், செடிகளை அகற்றஜேசிபி இயந்திரத்துடன் வந்தனர். பாதுகாப்புக்காக மேற்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் அகஸ்டின்ஆர்தர் தலைமையிலான போலீஸா ரும் வந்திருந்தனர்.

தகவல் அறிந்து, தோணுகால்ஊராட்சித் தலைவர் வெங்கடலட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ரேவதி ஜெயக்கண்ணன் மற்றும்கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர்திரண்டு வந்து ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வட்டாட்சியருக்கும், கிராம மக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, வட்டார வளர்ச்சிஅலுவலக அதிகாரிகள் அங்கு வந்துபேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தற்போது ஜேசிபி இயந்திரம் மூலம்சுத்தம் செய்யும் பணியை நிறுத்தவேண்டும். மலையடிவாரத்தில் இலவச பட்டா வழங்க கூடாது எனகிராம மக்கள் உறுதிபட தெரிவித்தனர். இப்பிரச்சினைக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் தீர்வு காணப்படும், தற்போது எந்தப் பணியும் நடக்காது என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்துகிராம மக்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x