வியாழன், டிசம்பர் 12 2024
Last Updated : 03 Oct, 2021 03:12 AM
Published : 03 Oct 2021 03:12 AM Last Updated : 03 Oct 2021 03:12 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் இடிந்தகல் புதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ராக்காயி (45). இவரது நாட்டுப் படகை கீழக்கரை கடல் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையால் படகில் தண்ணீர் தேங்கியிருந்தது. அதை அகற்றுவதற்காக நேற்று அதிகாலை சென்றார். படகிலிருந்து தண்ணீரை அள்ளி வெளியேற்றும் பணியில் ஈடுபட்டபோது, நிலை தடுமாறி கடலில் விழுந்தார். இதில் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். அவரது உடலை மீட்ட மெரைன் போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT