வியாழன், டிசம்பர் 12 2024
Last Updated : 26 Jun, 2021 03:13 AM
Published : 26 Jun 2021 03:13 AM Last Updated : 26 Jun 2021 03:13 AM
சிவகங்கையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டாட்சியர் ராமதாஸ் (71). அவருக்கு 3 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் மாலை அவருக்கு காலா வதியான குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. இதைக் கவனித்த உறவி னர்கள் அங்கிருந்த மருத்துவப் பணியாளர்களிடம் இது குறித்து கேட்டனர். அதற்கு,‘காலாவதியான குளுக்கோஸை 2 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். எந்தப் பிரச்சினையும் ஏற்படாது,’ என மருத்துவப் பணியாளர்கள் கூறினர். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT