Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

மேலாண்மை பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு - ஏஐசிடிஇ வழிகாட்டுதல்கள் வெளியீடு ​ :

நாடுமுழுவதும் கரோனா 2-வது அலை பரவலால் கல்லூரிகள் மூடப்பட்டு இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக பருவத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து நாடு முழுவதும் முதுநிலை பட்டயப் படிப்புகளை நடத்தும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் புதிய கல்வியாண்டில் (2021-2022) மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான வழிகாட்டுதல்களை அகில இந்திய தொழில்நுட்பகல்வி குழுமம் (ஏஐசிடிஇ) தற்போது வெளியிட்டுள்ளது. ​ அதன் விவரம் வருமாறு:

மேலாண்மை கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகார நீட்டிப்பை பல்கலைக்கழகங்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். முதுநிலை மேலாண்மை பட்டயப் படிப்புக்கான வகுப்புகளை ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்கலாம். எனினும் மாணவர் சேர்க்கை பணிகளை ஜூலை 10-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

​திறந்தவெளி மற்றும் இணையவழி கல்வி படிப்புகளுக்கான அனுமதியை பல்கலைக்கழகங்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் வழங்கவேண்டும். முதல்கட்ட மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 1-ம் தேதிக்குள்ளும், 2-ம் கட்ட மாணவர் சேர்க்கையை பிப்ரவரி 1-ம் தேதிக்குள்ளும் முடித்துவிட வேண்டும். கல்விக்கட்டணத்தை முழுமையாக செலுத்த மாணவர்களை வற்புறுத்தக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x