Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

10 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படும் - கோவை ஜிசிடி கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு :

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கான வாக்குகள் எண்ணப்படும் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி (ஜிசிடி) வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தேர்தலுக்காக, இவற்றில் மொத்தம் 4,437 வாக்குச்சாவ டிகள் அமைக்கப்பட்டு இருந்தன.கடந்த ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு (ஜிசிடி) எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள காப்பு அறைகளில் வைக்கப்பட்டன. இன்று (மே 2-ம்தேதி) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில், வாக்குப்பதிவு சரிபார்ப்புக்கான ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்பட உள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எண்ணுவதற்காக பிரத்யேக மேஜைகள் தொகுதி வாரியாக அமைக்கப் பட்டுள்ளன. அதன்படி, மேட்டுப்பாளையம், சூலூர், கோவைவடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய தொகுதிக ளுக்கு தலா 14 மேஜைகளும், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மட்டும் 20 மேஜைகளும்அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு மேஜை அருகிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேட்டுப்பாளையம் தொகுதிக்கு 30 சுற்றுகளாகவும், சூலூர், கவுண்டம்பாளையம், தொண்டா முத்தூர் தொகுதிகளுக்கு தலா 34 சுற்றுகளாகவும், கோவை வடக்குத் தொகுதிக்கு 36 சுற்றுகளாகவும், கோவை தெற்கு தொகுதிக்கு26 சுற்றுகளாகவும், சிங்காநல்லூர் தொகுதிக்கு 33 சுற்றுகளாகவும், கிணத்துக்கடவு தொகுதிக்கு 35 சுற்றுகளாகவும், பொள்ளாச்சி தொகுதிக்கு 23 சுற்றுகளாகவும், வால்பாறை தொகுதிக்கு 21 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணியில் 450-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

வாக்கு எண்ணிக்கை மையத்தில், மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குஎண்ணும் அறைக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. வாக்கு எண்ணும் மையத்துக்குள் வருபவர்கள் முகக்கவசம், முகத்திரை கட்டாயம் அணிந்து வர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x