Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

ஆய்வறிஞர் கு. சிவமணிக்கு தேவநேயப் பாவாணர் விருது புதுச்சேரி தமிழ் அமைப்பினர் வாழ்த்து

கு. சிவமணிக்கு

புதுச்சேரி

ஆய்வறிஞரும் அகராதியியல் துறை வல்லுநருமான பேராசி ரியர் கு. சிவமணிக்கு (89) தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் வழங் கப்படும் தேவநேயப் பாவாணர் விருதினைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்விருது முதன்முதலாக கு.சிவமணிக்கு வழங்கப்பட உள்ளது.

தேவநேயப் பாவாணர் விருது என்பது ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் தங்கப்பதக்கம் அடங்கியது. தமிழ்நாடு முதல் வரால் விரைவில் நடைபெற உள்ள அரசு விழாவில் இவ்விருது வழங்கப்பட உள்ளது.

பேராசிரியர் கு. சிவமணி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை இந்திய அரசுக்காக தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் சார்பில் தமிழில் மொழிபெயர்த்த பெருமைக் குரியவர். மேலும் புதுவை அரசுக்காக 1,391 பக்கங்களில் இவர் உருவாக்கிய சட்ட- ஆட்சியச் சொற்களஞ்சியம் இவர் தம் வாழ்நாள் சாதனைப் பணியாகும்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ் பயின்ற பேராசிரியர் கு. சிவமணி, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் புலவர் கல்லூரியில் முதல்வராகவும், நெல்லை மாவட்டம் பாபநா சம் திருவள்ளுவர் கலைக் கல் லூரியில் முதல்வராகவும் பணியாற்றியவர்.

குமாரபாளையம் அரசினர் பயிற்சிக் கல்லூரியில் தமிழாசிரியர் பயிற்சிக்குப் பொறுப் பாசிரியராக இருந்து 1,500 - க்கும் மேற்பட்ட நல்லாசிரியர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். தொல்காப்பியம், சங்க இலக்கியம் சார்ந்த ஆய்வு நூல்களை ஆங் கிலத்திலும், தமிழிலும் எழுதிய பெருமைக்குரியவர்.

பல தமிழ் மேடைகளில் தமிழ்ச் சிறப்பு குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் உரையாற்றியவர். செம் மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வறிஞராகவும் பணி செய்த பெருமைக்குரியவர்.

தேவநேயப் பாவா ணர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள கு. சிவமணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றம், புதுச்சேரி இலக்கிய வட்டம் உள்ளிட்ட தமிழமைப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

புதுவை அரசுக்காக 1,391 பக்கங்களில் இவர் உருவாக்கிய சட்ட - ஆட்சியச் சொற்களஞ்சியம் இவர் தம் வாழ்நாள் சாதனைப் பணியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x