வியாழன், டிசம்பர் 12 2024
Last Updated : 20 Jan, 2021 03:14 AM
Published : 20 Jan 2021 03:14 AM Last Updated : 20 Jan 2021 03:14 AM
ராமநாதபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் வீரபாண்டியன் (62). எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு கேணிக்கரை அருகே லாரி ஷெட்டில் இருந்தபோது, 4 பேர் அவரை கம்பியால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வீரபாண்டியன் தனக்கும், அதிமுக நகர் செயலாளர் அங்குச்சாமிக்கும் முன்விரோதத்தால், அதிமுகவைச் சேர்ந்த விஜயராமகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் தாக்கியதாக பஜார் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT