Published : 10 Jan 2021 03:28 AM
Last Updated : 10 Jan 2021 03:28 AM

கரோனா தொற்று பரவலால் 10 மாதங்களுக்குப் பின்பு நிபந்தனைகளுடன் முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு

முதுமலை புலிகள் காப்பகம் 10 மாதங்களுக்கு பிறகு திறக்கப் பட்டுள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமான முதுமலைபுலிகள் காப்பகம் சுமார் 630 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இங்குள்ள வனப்பகு தியையும், வனவிலங்குகளையும் கண்டுரசிக்க உள்நாடு, வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். வனத் துறை மூலம் யானை சவாரி, வாகன சவாரி நடத்தப்படுகின்றன. தெப்பக்காடு யானைகள் முகாமில்பராமரிக்கப்படும் 27 வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்குவதை நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் கண்டுரசிப்பர்.

கரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மற்ற சுற்றுலாத் தலங்கள் முழுவதும் திறக்கப்பட்ட நிலையில், முதுமலை புலிகள் காப்பகம் மட்டும் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் பத்து நிபந்தனைகளுடன் முதுமலை புலிகள் காப்பகம் நேற்று திறக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக, வரவேற்பு மையத்தில், பூஜையும் நடந்தது . தொடர்ந்து, வாகன சவாரியில், அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி 50 சதவீத சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல் கூறும் போது, ‘‘முதுமலை புலிகள் காப்பகத்தில் கரோனா வழிமுறைகளுடன் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப் படுகின்றனர்.

வனப்பகுதியிலுள்ள தங்கும் விடுதிகள், ஓய்வு விடுதிகள் 11-ம் தேதி முதல் (நாளை) இயங்கும். ஒவ்வோர் அறைக்கும் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தெப்பக்காடு யானைகள் முகாமில் 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காலை 8.30 மணிக்கும், மாலை 6 மணி மட்டுமே இது செயல்படுத்தப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x