Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM

மே.வங்கத்தின் விஷ்ணுபூரில் மிதுன் சக்கரவர்த்தி வாக்கு சேகரிப்பு :

கொல்கத்தா

பாஜகவில் அண்மையில் இணைந்த பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, மேற்கு வங்கத்தின் விஷ்ணுபூர் தொகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார்.

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி அண்மையில் பாஜகவில் இணைந்தார். மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். முதல்கட்ட தேர்தல் முடிவடைந்து இரண்டாம் கட்ட தேர்தலை மேற்கு வங்கம் எதிர்கொண்டுள்ள நிலையில், பாங்குரா மாவட்டம் விஷ்ணுபூரில் மிதுன் சக்கரவர்த்தி நேற்று சாலை வழி பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜக வேட்பாளருக்கு அவர் ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர் கூறும்போது, “மேற்கு வங்கத்தில் மாற்றம் வரும் என்பதையே சனிக்கிழமை நடந்த வாக்குப் பதிவு காட்டுகிறது” என்றார்.

முன்னதாக, முதல்கட்ட தேர்தலை சந்தித்த ஜங்கல் மெஹல் பகுதியில் தொடர்ந்து 3 நாள் மிதுன் சக்கரவத்தி சாலை வழி பிரச்சாரம் மேற்கொண்டார்.

மே.வங்கத்தில் சனிக்கிழமை நடந்த முதல்கட்ட தேர்தலில் 79.79 சதவீத வாக்குகள் பதிவாயின.

தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. ஆனால் தோல்வி பயம் காரணமாக திரிணமூல் கட்சி இதுபோன்ற புகார்களை கூறுவதாக பாஜக வேட்பாளர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x