Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM

புதிய கலால் கொள்கை வெளியீடு - மது அருந்தும் வயது 21 ஆக குறைப்பு, அதிகாலை 3 மணி வரை நேரம் நீட்டிப்பு : கேஜ்ரிவால் அரசிற்கு பாஜக, காங்கிரஸ் கண்டனம்

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு புதிய கலால் கொள்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில், மது அருந்துவோருக்கு 25 என்றிருந்த வயது 21 எனக் குறைக்கப்பட்டுள்ளது. பார்களை உயர்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கேளிக்கை, உணவு மற்றும் தங்கும் விடுதிகளின் மேற்புறத்தளங்களிலும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பார்களில் மது அருந்துவதற்காக அனுமதிக்கப் பட்டிருந்த நள்ளிரவு 1 மணி வரையிலான நேரத்தை அதிகரித்து அதிகாலை 3 மணி வரை எனவும் மாற்றப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ளது போல், டெல்லியில் இனி மதுக் கடைகளின் நடவடிக்கைகள் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, கடைகளுக்கு வருபவர்கள் குறிப்பிட்ட வகை மதுவை சிறிது ருசித்து பார்க்கவும், அதை உண்டால்தாக்கம் என்னவாக இருக்கும் என்ற தகவல்களும் கிடைக்கும். எனினும், இந்த வசதி சில அரிதான வகை மதுவை விநியோகிக்கும் உயர்குடிவாசிகளின் பகுதிகளில்உள்ள பார்களில் மட்டும் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வசதிஇந்தியாவின் வேறு எந்தமாநிலங்களிலும் செய்யப்படவில்லை.

இதுபோன்ற காரணங்களால் டெல்லியின் பாஜக, காங்கிரஸ் ஆகிய எதிர்கட்சிகள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அரசிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

இளைஞர்கள் மதுவுக்கு அடிமை

இது குறித்து பாஜகவின் டெல்லி மாநில தலைவர் ஆதேஷ் குமார் குப்தா கூறும்போது, ‘புதிய கலால் கொள்கையால் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும். இதை தவிர்க்கவே குஜராத்திலும், பிஹாரிலும் மதுவிலக்கு அமலாகி உள்ளது. ஆனால், இங்கு 21 என வயதை குறைத்து இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாக்கப்படுகின்றனர்’ எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து ஆம் ஆத்மி தலைமை செய்தித்தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறும்போது, ‘பாஜக ஆளும் மாநிலங்களில் மது அருந்துவோருக்கான வயது 25 என்றுள்ளது. குறிப்பாக அக்கட்சிஆளும் கோவாவில் அதற்கான வயது 18. இவற்றை 25 என உயர்த்தினால் எங்கள் அரசு டெல்லியில் மது அருந்துவோருக்கான வயதை 30 என உயர்த்தத் தயார்’ என்றார். .

மத்திய உள்துறை அமைச்சகத் தின் கீழ் செயல்படும் டெல்லி காவல் துறையினர், 21 வயதுள்ளவர்கள் பலரும் விடுதிகளில் மதுஅருந்துவதாகவும், அதை தடுக்காமல் லஞ்சம் பெறுவதாகவும் சவுரப் பரத்வாஜ் புகார் கூறி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x