Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM

நேபாளம், இலங்கையிலும் பாஜக.. ‘வைரல்’ ஆன திரிபுரா முதல்வரின் கருத்து

சில ஆண்டுகளுக்கு முன் பாஜக தலைவராக அமித்ஷா பதவி வகித்தபோது திரிபுரா வந்திருந்தார். அப்போது பல மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்திருப்பதாக என்னுடன் இருந்த, பாஜகவின் வடகிழக்கு மண்டல செயலாளர் கூறினார். இதற்கு அமித்ஷா, ‘நேபாளமும் இலங்கையும் எஞ்சியுள்ளன. அங்கும் நாம் வெற்றி பெற வேண்டும்’ என அமித்ஷா கூறினார். இவ்வாறு பிப்லப் குமார் தேப் கூறினார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.

இது தொடர்பாக திரிபுரா காங்கிரஸ் துணைத் தலைவர் தபன் தே கூறும்போது, “பாஜகவின் இந்தப் போக்கு தேச மற்றும் ஜனநாயக விரோதமானது. அண்டை நாடுகளை நாம் மதிக்கிறோம். அந்நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட நமக்கு உரிமையில்லை” என்றார்.

இதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நபேந்து பட்டாச்சார்யா, “இந்திய கலாச்சாரம் மற்றும் தத்துவத்தை உலக நாடுகளில் பாஜக பரப்பி வருகிறது. அதைத் தான் பிப்லப் தேவ் கூறுகிறார்” என்று தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய கருத்தை பிப்லப் தேப் கூறுவது இது முதல்முறையல்ல. மகாபாரத காலத்திலேயே இன்டெர்நெட் இருந்துள்ளது என கடந்த 2018-ல் அவர் கூறினார். வாத்துகளால் நீர்நிலைகளில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என கடந்த ஆகஸ்ட் மாதம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x