Published : 14 Feb 2021 03:17 AM
Last Updated : 14 Feb 2021 03:17 AM

காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி மத்தியஅரசு உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல் ஜம்மு, லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் கடந்த 4-ம் தேதிமாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2021-ஐ மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தாக்கல்செய்தார். இது ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு அவசர சட்டத் திருத்தத்துக்கு பதிலாக கொண்டு வரப்பட்டது.

இந்த மசோதா கடந்த திங்கள்கிழமை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்துக்கு நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த மசோதாவை கொண்டு வந்ததன் மூலம் யூனியன் பிரதேச அந்தஸ்து மாநிலமாக மாறாது என்று பல்வேறு எம்.பிக்களும் நினைக்கின்றனர். இங்கே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஜம்மு காஷ்மீர் மீண்டும் மாநில அந்தஸ்து பெறாது என்று மசோதாவின் எந்தவொரு இடத்திலும் எழுதப்படவில்லை. தற்போது கொண்டு வந்துள்ள மசோதாவானது ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு எந்தவித பாதகத்தையும் ஏற்படுத்தாது. யூனியன் பிரதேசமாக இருக்கும் ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x