Published : 12 Dec 2020 03:16 AM
Last Updated : 12 Dec 2020 03:16 AM

இந்தியப் பொருட்கள் ஏற்றுமதிக்கு இலக்கு: வால்மார்ட் திட்டம்

இந்திய பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் இந்திய ரீடெய்ல் விற்பனை, இ-காமர்ஸ் விற்பனை துறைகளில் அமெரிக்க வால்மார்ட் நிறுவனம் கால் பதித்தது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி இலக்கு, தற்போதுள்ள அளவை விட 3 மடங்காக நிர்ணயித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.73 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்தியப் பொருட்கள் ஆகும். இந்த இலக்கை 2027-ல் எட்ட திட்டம் வகுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் உணவு, மருந்து, நுகர்ப்பொருட்கள், ஆரோக்கியம், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பிற அனுமதிக்கப்பட்ட ஏற்றுமதி பொருட்கள் ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் இந்திய சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் பயன் அடைவார்கள் எனக் கூறியுள்ளது.

மேலும் பிளிப்கார்ட்டின் சமர்த் மற்றும் வால்மார்ட்டின் சப்ளையர்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கும் பெரும் பங்கு வகிக்கும் எனவும் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x