Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM

மகளிருக்கு எதிரான புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக விமர்சனம் - தமிழக பெண்களை இழிவுபடுத்தும் காங்., திமுக கூட்டணி : தாராபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

தமிழக பெண்களை இழிவுபடுத்து வதாக காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். இதை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் அக்கட்சிகளுக்கு மோடி எச்சரிக்கை விடுத்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுர த்தில் நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர் தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

தமிழக கலாச்சாரத்தில் இந்தியா பெருமை கொள்கிறது. தேசிய ஜன நாயகக் கூட்டணி என்ற குடும்பம், மக்களுக்கு சேவை செய்யக் காத் திருக்கிறது. ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதை அடிப்படையா கக் கொண்டு உங்களிடம் வாக்கு கேட்கிறோம்.

தாராபுரம் பகுதியை ரயில்வே மூலம் இணைக்க மத்திய அரசு பரிசீலிக்கும். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் உறுதி கொண்டுள்ளோம். அத னால்தான் மருத்துவம், பொறியியல் கல்வியை தாய்மொழியில் பயிற்றுவிக்கத் தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த தேவேந் திரகுல வேளாளர்களின் கோரி க்கையை நிறைவேற்றியுள்ளோம்.

ஒருபுறம் தேசிய ஜனநாயகக் கூட்டணி, வளர்ச்சியை உங்கள் முன்னால் வைக்கிறது, மறுபுறம் காங்கிரஸ்–திமுக கூட்டணி, வாரிசு அரசியல் திட்டத்தை உங்கள் முன்னால் வைத்திருக்கிறது.

எதிரணி தலைவர்களின் பேச் சும், அவர்களின் செயல் திட்டமும் அடுத்தவர்களை அவமானப் படுத்துகின்ற அல்லது பொய்யான செய்திகளாகவே உள்ளன. காங் கிரஸ் - திமுக கூட்டணி தமிழக பெண்களுக்கு எதிரான புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இத்தகைய தாக்குதல் தமிழக பெண்களை இழிவுபடுத்தும் நோக்கத்துக்காக ஏவப்பட்ட ‘2ஜி’ ஏவுகணையாகும். பெண்களை இழிவுபடுத்துவோர் மீது காங்கிரஸ், திமுக கூட்டணித் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில நாட்களாக அந்த கூட்டணித் தலைவர்களின் செயல், தமிழக பெண்களை இழிவுபடுத்தும் வகை யில் உள்ளது. இதை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். முதல்வரின் தாயாரை இழிவுபடுத்தும் நோக்கில் பேசி யுள்ளனர். ஒருவேளை இவர்கள் அரசுப் பதவிக்கு வந்துவிட்டால், தமிழக பெண்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். இன்னும் இவர்கள் பெண்களை அவமானப் படுத்துவார்கள், இழிவு செய் வார்கள்.

எங்கள் கூட்டணியில் உள்ளவர் கள் மிகச்சிறந்த பெண்மணிகளான ஆண்டாள், அவ்வையாரால் உத் வேகம் பெற்றவர்கள். பெண்கள் இல்லாமல் சமூக வளர்ச்சி இல்லை என்ற கருத்தில் உறுதியாக இருக் கிறோம். அதனால்தான் எங்கள் அனைத்து திட்டங்களையும் பெண் சக்தியை மேம்படுத்துவதற்காகவே ஏற்படுத்தியுள்ளோம்.

தமிழகத்தில் வறுமை நிலையில் உள்ள 32 லட்சம் பெண் களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைவருக் கும் வீடு திட்டத்தில் கிராமப் பகுதியில் 3 லட்சம் பேருக்கும், நகர்ப் பகுதியில் 3.8 லட்சம் பேருக்கும் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் அனைத்தும் பெண்கள் பெயரிலேயே இருக்க நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம்.

மகளிர் பேறுகாலத் திட்டத்தின் மூலம் 10 லட்சம் பேர் பயனடைந் துள்ளனர். இதுபோன்ற திட்டங்கள் பெண்களின் மரியாதையை, வளர்ச்சியை மேம்படுத்தும் என கருதுகிறோம்.

கொங்கு பகுதி மக்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன். ஏனென் றால் இந்த பகுதி மக்கள் தொழில் தொடங்கி, அதனை வளர்ச்சி அடை யச் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் உள்ளவர்கள். தொழில் நேர்த்தி உடையவர்கள். இதன் மூலம் இந்த நாட்டுக்குச் செல் வத்தை சேர்த்துள்ளீர்கள். அதேசமயம் கருணை உள்ளம் கொண்டவர்கள்.

கடந்த ஆண்டு டிசம்பரில் உற் பத்தி சார்ந்த தொழில்களை ஊக்கு விக்கும் நடவடிக்கைகள் தொடங் கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் உற்பத்தி சார்ந்த தொழில்கள் உரு வாக ஊக்குவிக்கப்படும். கோவை யில் உற்பத்தி செய்யப்பட்ட ராணுவ கவச வாகனங்களை பாதுகாப்பில் ஈடுபட அர்ப்பணித்தேன்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் நாட்டின் முதுகெலும்பாக உள்ளன. அவற்றுக்கான வரையறையை நாங்கள் மாற்றி அமைத்துள்ளோம். இதன்மூலம் ஏராளமானோர் தொழில் செய்ய முன்வருவர். இது போன்ற நிறுவனங்களுக்காக ரூ.14,000 கோடி வழங்கப்பட்டுள் ளது. 1.5 லட்சம் பேர் வட்டி தள்ளுபடி திட்டத்தின் வாயிலாக பயன்பெற் றுள்ளனர். 8.5 லட்சம் பேர் மத்திய அரசின் கடன் உதவித் திட்டங்கள் மூலம் பயன்பெற்றுள்ளனர்.

வேளாண் துறை சீர்திருத்தம்

வேளாண் துறை நவீனம் மற்றும் சீர்திருத்தத்துக்கு உள் ளாக வேண்டியுள்ளது. சிறு விவ சாயிகளை இடைத்தரகர்களிட மிருந்து காக்க பல்வேறு முயற்சி களை எடுத்து வருகிறோம். நீர் ஆதா ரத்தை பாதுகாக்கவும், சொட்டு நீரில் அதிகபட்ச விளைச்சல் தரவும், பழைய பாசன முறைகளுக்கு மாற் றாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீர்ப்பாசன முறை உருவாக்கப்பட உள்ளது. ஜல்சக்தி திட்டம் மூலம் 10 லட்சம் வீடு களுக்கு குடிநீர் இணைப்பு வழங் கப்பட்டுள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கை தொலைநோக்குப் பார்வையிலும், உங்களது கனவை நனவாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப் பேரவைத் தலைவர் தனபால், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உட்பட கூட்டணி கட்சித் தலை வர்கள், வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

‘வீரவேல், வெற்றிவேல்’ என முழங்கி பிரதமருக்கு வேல் தந்த முருகன்

தாராபுரம் பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற பாஜக மாநில தலைவரும் தாராபுரம் தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் ‘வெற்றி வேல், வீரவேல்’ என முழங்கினார். இதேபோல் கூட்டத்தினரும் பதில் குரல் எழுப்ப, மோடி உற்சாகமானார். பின்னர் தமிழக பாஜக சார்பில் அவருக்கு நினைவுப்பரிசாக எல்.முருகன் வேல் பரிசளித்தார்.

அதன்பின் சிறப்புரையாற்ற தொடங்கிய பிரதமர் தனது உரையின் தொடக்கமாக ‘வெற்றிவேல்' எனக் கூற கூட்டத்தினரும் ‘வீரவேல்' என முழக்கமிட்டனர். பின்னர் ஆங்கிலத்தில் பிரதமர் தனது உரையைத் தொடர்ந்தார். இதனை கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரும் தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் தமிழில் மொழி பெயர்த்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x