Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM

‘வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தற்காலிகமானது’ - ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு : முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசியதாக விளக்கம்

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு தற்காலிகமானதுதான் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரி வித்துள்ளார். இதனைக் கண்டித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், சட்டப்பேரவை யில் சட்டம் நிறைவேறிவிட்டால் அது நிரந்தரமானதுதான் என்று பதிலளித்துள் ளார். இதனால் இந்த விவகாரத்தில் அதிமுக, பாமக இடையே சர்ச்சை எழுந்துள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் "தி இந்து" ஆங்கில நாளிதழுக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்துள்ளார். அதில், “அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு தற்காலிக ஏற்பாடுதான். சாதி வாரி இடஒதுக்கீடு குறித்து ஆராய் வதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் கணக்கெடுப்பு நடத்தி முடித்த பின்னர், அதனடிப்படையில் சாதிகளின் விகிதா சாரத்துக்கு ஏற்ப, வன்னியர்களுக்கான உள்இடஒதுக்கீடு கூடவோ அல்லது குறை யவோ செய்யும்" என்று கூறியுள்ளார்.

ராமதாஸ் கண்டனம்

ஓபிஎஸ்-ன் இந்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் தற்காலிகமானதுதான் என்று சமூகநீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறி வருகின்றனர். வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு என்பது சாதிப் பிரச்சினை அல்ல. அது சமூகநீதி சார்ந்த, தமிழ்நாட்டின் வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை. 20 சதவீத தனி இடப்பங்கீடு கோரி கடந்த 40 ஆண்டுகளாக வன்னியர் சங்கமும், பாமகவும் நடத்திய அறப்போராட்டங் களின் பயனாக 10.5 சதவீத இடப்பங்கீடு வழங்கும் சட்டம் பேரவையில் நிறைவேற் றப்பட்டது. அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் அது நிரந்தரமானதுதான். சட்டத்தில் தற்காலிகச் சட்டம் என்று ஒன்று கிடை யாது. எங்கள் கோரிக்கையை முதல்வர் பழனிசாமி ஏற்றுக் கொண்டு சட்டத்தை கொண்டு வந்தார். சட்ட மசோதா மீதான விவாதத்தில் கூட 10.5 சதவீத உள்ஒதுக்கீடு என்பது முதற்கட்டம் தான். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அது உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் பேரவையில் தெரி வித்துள்ளார். செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசிய போதும் கூட இந்தச் சட்டம் நிரந்தமானதுதான் என முதல்வர் தெரிவித்தார். எனவே இந்த விவகாரத்தில் முதல்வர் தெளிவாக இருக்கிறார்.

சாதிவாரி மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு அளவையும் உயர்த்தி புதிய சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்படுவதை பாமக உறுதி செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x