Published : 18 Dec 2020 03:16 AM
Last Updated : 18 Dec 2020 03:16 AM

பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் மூலம் தகவல் தொடர்புக்கான சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் கே.சிவன் வாழ்த்து

பிஎஸ்எல்வி - சி50 ராக்கெட் மூலம் தகவல் தொடர்பு சேவைக்கான சிஎம்எஸ்-1 செயற் கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் கே.சிவன் வாழ்த்து தெரிவித்தார்.

விண்வெளி ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் வேகமாக முன் னேறி வருகிறது. தொலைதொடர்பு, தொலை உணர்வு, வழிகாட்டுதல் ஆகிய பயன்களுக்காக நவீன செயற்கைக் கோள் களையும், அவற்றை விண்ணில் செலுத்து வதற்கு தேவையான பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்களையும் திறம் பட உள்நாட்டிலேயே தயாரித்து தற்சார்பு நிலையை இந்தியா எட்டியுள்ளது.

ஆயுட் காலம் முடிந்துவிட்டது

இதற்கிடையே, நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் இன்சாட், ஜிசாட் வகையிலான செயற்கைக் கோள்கள் விண்ணில் வெற்றி கரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதில், கடந்த 2011-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-12 செயற்கைக் கோளின் ஆயுட் காலம் முடிந்துவிட்டது.

அதற்கு மாற்றாக, அதிநவீன சிஎம்எஸ்-1 (ஜிசாட்-12ஆர்) செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த செயற் கைக் கோளை பிஎஸ்எல்வி - சி50 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி நேர கவுன்ட்-டவுன் 16-ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி - சி50 ராக்கெட் நேற்று மதியம் 3.41 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 20 நிமிடத்தில், 545 கி.மீ தொலை வில், புவிவட்டப்பாதையில் சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

அதிநவீன சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள் 1,410 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள். இதில் உள்ள விரிவுபடுத்தப்பட்ட சி பேண்ட் அலைக்கற்றைகள் இந்திய நிலபரப்பு பகுதிகளுடன், அந்தமான், நிகோபார் மற்றும் லட்சத்தீவுகள் வரை தற்போது உள்ள தொலைதொடர்பு சேவையை மேம்படுத்தி வழங்க உதவும். அதனுடன் இணையவழி கல்வி, தொலை மருத்துவம், பேரிடர் கண்காணிப்பு, செல்போன் சேவைக்கும் பயன்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பிஎஸ்எல்வி - சி50 வெற்றிக்கு பிறகு, விஞ்ஞானிகள் தங்கள் மகிழ்ச்சியை பரி மாறிக் கொண்டனர். தொடர்ந்து, விஞ்ஞானி களுக்கு வாழ்த்து தெரிவித்து, இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேசியதாவது:

கரோனா பரவல் சூழலில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் குறைந்த எண்ணிக்கையிலான விஞ்ஞானிகள், பணியாளர்களைக் கொண்டு பிஎஸ்எல்வி - சி50 திட்டத்தை வெற்றிகரமாக செயல் படுத்தி உள்ளோம்.

சிஎம்எஸ் செயற்கைக் கோள் தற் போது தற்காலிக சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அதில் உள்ள உந்துவிசை மோட்டார்கள் மூலம் அடுத்த 4 நாட்களில் படிப்படியாக திட்ட மிட்ட புவிவட்டப்பாதையில் நிலைநிறுத் தப்படும்.

இதையடுத்து, இஸ்ரோ செயல்படுத்த உள்ள பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் திட்டம் மிகவும் முக்கியமானது. ஏனெனில், இதில் செலுத்தப்படவுள்ள பிக்ஸல் ஸ்டார்ட்அப் மையத்தின் ‘ஆனந்த்’, ஸ்பேஸ் கிட்ஸ் இந் தியா அமைப்பின் ‘சதிஷ்’, பல்கலைக்கழ கங்கள் கூட்டமைப்பின் ‘யுனிவ்சாட்’ ஆகிய 3 செயற்கைக் கோள்களும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானவை.

விண்வெளி துறையில் தனியாருக்கு பங்களிப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் விரைவில் அவை விண்ணுக்கு செலுத்தப் பட உள்ளன. இதுதவிர, ககன்யான், ஆதித்யா எல்-1, சந்திரயான்-2 ஆகிய திட்டப் பணிகளும் முடுக்கிவிடப்பட் டுள்ளன. மேலும், எஸ்எஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

முக்கிய அம்சங்கள்

l பிஎஸ்எல்வி வகையில் தற்போது செலுத்தப்பட்டிருப்பது 52-வது ராக் கெட். மேலும், இது 6 உந்துவிசை மோட்டார் கொண்ட எக்ஸ்எல் ரகத்தில் 22-வது ராக்கெட். ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 77-வது ராக்கெட் ஆகும்.

l இஸ்ரோ சார்பில் 41 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டிருந் தன. 42-வது செயற்கைக் கோளாக சிஎம்எஸ்-1 ஏவப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு கரோனா பரவல் காரணமாக, 2 ராக்கெட் ஏவுதல் திட்டங்களை மட்டுமே இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x