Published : 01 Dec 2020 03:15 AM
Last Updated : 01 Dec 2020 03:15 AM

இறுதியாண்டு மாணவர்களுக்காக கல்லூரிகளை 7-ம் தேதி திறக்க அனுமதி தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் டிச.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு அரசியல், சமுதாய நிகழ்ச்சிகள் நடத்தலாம் முதல்வர் அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளு டன் டிசம்பர் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள் ளார்.

கலை, அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட கல் லூரிகள், விடுதிகள் இறுதியாண்டு மாணவர்களுக்காக டிச.7 முதல் திறக்க அனுமதிக்கப்படுவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத் தப்பட்டது. பின்னர், ஒவ்வொரு மாத மும் பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக் கப்பட்டு வருகிறது. அதன்படி, 10-ம் கட்ட ஊரடங்கு நவ.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது கரோனா பரவல் குறைந் துள்ள நிலையில், 11–வது கட்ட மாக ஊரடங்கை நீட்டிப்பது குறித்து கடந்த 28-ம் தேதி மாவட்ட ஆட் சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனையின்பேரில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளு டன் டிசம்பர் 31-ம் தேதி வரை ஊர டங்கை நீட்டித்து முதல்வர் பழனி சாமி அறிவித்துள்ளார். இதுதொடர் பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மார்ச் மாதம் முதல் ஊரடங்கை அமல்படுத்தி, மக்களை பாதுகாத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நோய்த் தொற்று பரவல் படிப்படி யாக குறைந்து வருகிறது. தமிழக அரசின் சிறப்பான செயல் பாடு, பொதுமக்களின் ஒத்துழைப் பால்தான் நோய்த் தொற்று கட்டுக் குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களாக பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை தினசரி 1,600 பேருக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை யும் 50 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் நவ.30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களின் கருத்துகள், மூத்த அமைச்சர்கள் அளித்த ஆலோ சனை, தற்போதைய நோய்ப் பரவல் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் தற்போது அமலில் உள்ள ஊர டங்கு, ஏற்கெனவே உள்ள பல் வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளு டன் டிச 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் ஏற் கெனவே உள்ள தளர்வுகளுடன் கூடுதலாக பல பணிகள் அனுமதிக் கப்படுகின்றன.

l நிலையான வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல் கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் , மாணவர்களுக்கான விடுதிகள் ஆகியவை டிசம்பர் 7-ம் தேதி முதல் தொடங்க அனுமதிக்கப் படுகிறது.

l மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரி களில் இளநிலை, முதுநிலை வகுப்புகள் டிசம்பர் 7 -ம் தேதி தொடங்க அனுமதிக்கப்படு கிறது. இருப்பினும், 2020-21 கல்வியாண்டில் சேரும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகளும் அவர்களுக்கான விடுதிகளும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் செயல் பட அனுமதிக்கப்படுகிறது.

l நீச்சல் குளங்களை பொறுத்த வரை விளையாட்டு பயற்சிக் காக மட்டும் செயல்பட அனு மதிக்கப்படுகிறது.

l வரும் நாட்களில் நோய்த் தொற் றின் நிலவரப்படி, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி டிசம்பர் 14-ம் தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்.

l வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சுற்றுலாத் தலங் களுக்கு மக்கள் செல்ல அனு மதிக்கப்படுகிறது. பொருட் காட்சி அரங்கங்கள் வர்த்தகர் களுக்கு இடையிலான செயல் பாடுகளுக்காக மட்டும் செயல் பட அனுமதிக்கப்படுகிறது.

l உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவீத இருக்கை கள் அல்லது அதிகபட்சம் 200 பேர் பங்கேற்கும் வண் ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் டிசம் பர் 1 முதல் 31 வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது. இதற்கு, மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சியில் காவல் ஆணை யரிடம் முன்அனுமதி பெற வேண்டும். வரும் நாட்களில் தொற்று நிலவரப்படி, திறந்த வெளி கூட்டங்கள் நடத்த அனுமதிப்பது குறித்து முடி வெடுக்கப்படும்.

l புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வரு பவர்களுக்கு இ-பதிவு முறை தொடரும்.

தொடரும் தடைகள்

மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்த வழித்தடங்கள் தவிர சர்வதேச விமான போக்குவரத்துக் கான தடை தொடரும். தமிழகம் முழு வதும் உள்ள நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளின்றி ஊர டங்கு முழுமையாக கடைபிடிக்கப் படும்.

கரோனா பரவல் குறையவும், முழுமையாக தடுக்கவும் அனை வரும் தொடர்ந்து பாடுபட வேண் டும். நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில் பொதுமக்கள் பொதுஇடங்களில் அதிகம் கூடுவதை தவிர்த்து, விழிப்புடன் இருக்க வேண்டும்.

பொதுமக்கள் வெளியில் செல் லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். வீட்டிலும், பணியிடங் களிலும் அடிக்கடி சோப்பால் கைகழுவுதல், சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும். அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால்தான் நோய்த் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x