Published : 16 Oct 2021 06:10 am

Updated : 16 Oct 2021 06:10 am

 

Published : 16 Oct 2021 06:10 AM
Last Updated : 16 Oct 2021 06:10 AM

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு :

சென்னை

தமிழகத்தில் நீலகிரி, கோவை,சேலம், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது,

‘‘16-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம்,ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானமழையும் பெய்யக் கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்’’ என்றார்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x