Published : 22 Mar 2021 03:12 AM
Last Updated : 22 Mar 2021 03:12 AM

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு - தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு :

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது.

நடப்பு ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும் என்று என்டிஏ அறிவித்தது. அதன்படி 2-ம் கட்டமாக மார்ச் மாதத்துக்கான தேர்வு கடந்த 16, 17, 18-ம் தேதிகளில் நடைபெற்றது.

இதற்கு விண்ணப்பித்திருந்த 6.19 லட்சம் மாணவ, மாணவிகளில் 87 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை என்டிஏ வெளியிட்டுள்ளது.

அதன் விவரங்களை https://jeemain.nta.nic.in/என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதில் ஏதேனும் ஆட்சேபம் இருப்பின் அவற்றை உரிய ஆதாரங்களுடன் இன்றைக்குள் (மார்ச் 22) தெரிவிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு மறுப்பு விடைக்கும் ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும்.

கூடுதல் விவரங்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இறுதி விடைக்குறிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேஇஇ 3-ம் கட்டமுதல்நிலைத் தேர்வு ஏப்.27 முதல்30-ம் தேதி வரை நடக்கவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x