Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு கரோனா தொற்றை தடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பு

மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு தந்திரிகண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஏ.கே.சுதீர் நம்பூதிரி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கோயில் கதவுகளை திறந்தார். புதிதாக தேர்வுசெய்யப்பட்டுள்ள மேல்சாந்தி ஜெயராஜ் பொட்டி, மாளிகைபுரம் மேல்சாந்தி ராஜ்குமார் ஆகியோர் 18-ம் படியில் முதலில் ஏறி வழிபாடு நடத்தினர்.

கார்த்திகை முதல் நாளானநேற்று முதல் கோயிலில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றைத் தடுக்க பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 10 முதல் 60வயது வரையிலான பக்தர்கள் மட்டுமே கோயிலுக்கு வர அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் தங்களுக்கு கரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ்களுடன் வரவேண்டும். நிலக்கல், பம்பைஅடிவார முகாம்களுக்கு வருவதற்கு 24 மணி நேரம் முன்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

கோயிலில் தங்கக் கூடாது

தினசரி 1,000 பக்தர்களும் சனி,ஞாயிறுகளில் 2,000 பக்தர்களும்அனுமதிக்கப்படுவார்கள்.கோயில் வளாகத்தில் தங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. திருவனந்தபுரம், திருவல்லா, செங்கண்ணூர், கோட்டயம் ஆகிய இடங்களில் உள்ளபேருந்து, ரயில் நிலையங்களில்சபரிமலை செல்லும் பக்தர்களுக்குகரோனா பரிசோதனை செய்யமாநில சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x