Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

ஆடவர் ஒற்றையர் பிரிவில் - அமெரிக்க ஒபன் பட்டம் வென்றார் ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் :

அமெரிக்க ஒபன் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோ விச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டேனியல் மேத்வதேவ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தினார். மேத்தேவ் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். இதன் மூலம் 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் ஜோகோவிச்சின் கனவு கலைந்தது. இந்த ஆண்டில் மட்டும் தொடர்ச்சியாக 27 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த ஜோகோவிச் முதன்முறையாக தோல்வியை சந்தித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் இறுதி ஆட்டத்தில் மேத்வதேவை வீழ்த்திய ஜோகோவிச் அதன் பின்னர் ஜூன் மாதம் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன், ஜூலை மாதம் நடைபெற்ற விம்பிள்டன் போட்டிகளிலும் வாகை சூடியிருந்தார். அதைத் தொடர்ந்து ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட் டியை அமெரிக்க ஒபனை வெல் லும் முனைப்புடன் இருந்த ஜோகோவிச்சுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார் 2ம் நிலை வீரரான மேத்வதேவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x