Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM

இஸ்ரேலில் புனித யாத்திரை நெரிசலில் 44 பேர் உயிரிழப்பு :

இஸ்ரேலில் நடைபெற்ற புனித யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் மேரோன் நகரில் புகழ்பெற்ற துறவி ரபி ஷிமோனின் கல்லறை உள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் 30-ம் தேதி இந்தப் பகுதிக்கு ஆயிரக்கணக்கான யூதர்கள் யாத்திரை வருவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இஸ்ரேலில் நடப்பாண்டு முதல் கரோனா பரவல் கணிசமாக குறைந்து வருவதைக் கருத்தில்கொண்டு, இந்த யாத்திரைக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று காலை மேரோன் நகரில் சுமார் 10 ஆயிரம் பேர் குவிந்தனர். அரசு எதிர்பார்த்த அளவை விட இந்த எண்ணிக்கை 4 மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.

இந்த சூழலில், மதியம் ஒரு மணியளவில் பக்தர்கள் வழிபடுவதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு மேடை, பாரம் தாங்காமல் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற முயற்சித்தனர்.

இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கினர். தகவ லறிந்து வந்த போலீஸார், அப்பகுதிக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்களை மீட்புப் படையினர் மீட்டனர். மேலும் 300-க்கும் மேற் பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர். இவர்களில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 44-ஆக உயர்ந்தது. பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந் தோரின் குடும்பத்தினருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x