Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM

டி 20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல்ஆட்டத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் டெஸ்ட் தொடரை அடுத்து இரு அணிகளும் 5 டி 20 ஆட்டங்களில் மோத உள்ளன.

மார்ச் 12-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் இந்த டி 20 தொடருக்கான இயன் மோகன் தலைமையிலான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. டி 20 தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி வரும் 26-ம் தேதி இந்தியாவுக்கு புறப்படுகிறது. அணி விவரம்:

இயன் மோர்கன் (கேப்டன்), டேவிட் மலான், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய், ரீஸ்டாப்லே, மொயின் அலி, சேம்பில்லிங்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், சேம் கரண், டாம் கரண், ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான், ஆதில் ரஷீத், மார்க் வுட்.

ஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிஈஸ்ட் பெங்கால் – ஹைதராபாத்

நேரம்: இரவு 7.30

இடம்: கோவாநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x