Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 06:30 AM

இளைஞர் எரிக்கப்பட்ட வழக்கை எஸ்சி, எஸ்டி வன்கொடுமை பிரிவுக்கு மாற்ற வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மேட்டுப்பாளையத்தில் இளைஞர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட வழக்கை எஸ்சி, எஸ்டி வன் கொடுமை பிரிவுக்கு மாற்றி உரியவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுவை முதல்வரிடம் வலியு றுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம் முதல்வர் ரங்கசாமி யிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மேட்டுப்பாளையம் காவல் நிலையம் அருகே உள்ள பெட்ரோல்பங்கில் கடந்த ஜூலை 25-ம் தேதிதிருச்சி பெராட்டியூர் கீழத்தெரு வைச் சேர்ந்த சதிஷ்குமார் (33) என்ற இளைஞர் வந்துள்ளார். அவரை விசாரித்த பாஜக நிர்வாகியும், பெட்ரோல் பங்கின் உரிமையாளருமான ராஜமவுரியா, சதிஷ்குமாரிடம் ஊர் மற்றும் சாதியினை கேட்டுள்ளார். அதற்கு தான் எஸ்சி பிரிவை சேர்ந்தவர் என்று பதில் அளித்துள்ளார். பிறகு உரிமையாளர் ராஜமவுரியா, சதிஷ்குமாரை சாதி பெயரை சொல்லி, கிண்டலும், கேலியும் செய்துள்ளார். அதற்கு கோபமாக பதிலளித்த சதீஷ்குமாரை, பங்கின் உரிமையாளர் ராஜமவுரியா (27), அவரது தம்பி ராஜவரதன் (21) மற்றும் 5 நபர்கள் சேர்ந்து கட்டி வைத்து சித்ரவதை செய்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். மேலும், பெட்ரோல் ஊற்றி சதிஷ் குமாரை எரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜமவுரியா, ராஜவரதன் மற்றும் 5 நபர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் குற்றவாளிகள் தங்களது செல்வாக்கை பயன் படுத்தி தடயங்களை அழித்து வருகிறார்கள். இதனால் வழக்கில் தடயங்களை அழிப்பதற்கான குற்றப் பிரிவையும் சேர்க்க வேண்டும்.மேலும், மீதமுள்ள குற்றவாளி களை உடனடியாக கைது செய்து, இவ்வழக்கை எஸ்சி, எஸ்டி வன்கொடுமை பிரிவுக்கு மாற்றி உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

60 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சதீஷ் குமாரின் உயிரை பாதுகாக்க உயர்தர சிகிச்சைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட சதிஷ்குமா ருக்கு நிவாரணம் மற்றும் அவ ரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x