வீட்டு உள் அலங்காரத்தை நாமே வடிவமைக்கலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 24

வீட்டு உள் அலங்காரத்தை நாமே வடிவமைக்கலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 24
Updated on: 
2 min read

வீடுகளை​யும் புதிய அறைகளை​யும் வடிவ​மைக்​கும்​போது எந்​தப் பொருளை எங்கு வைப்​பது, அது அறையுடன் சரியாகப் பொருந்​துமா, அறை​யின் அளவுக்​கும் வண்​ணத்​துக்​கும் ஏற்ற அறைக்​கலன்​கள் யாவை என்​ப​தையெல்​லாம் கண்​டறிவது அனைவருக்​கும் எளிதல்ல. இந்​தச் சிரமத்​தைப் போக்கி, திறன்​பேசி மூலமாகவே முப்​பரிமான (3D) முறை​யில் மிக எளிதாக வீட்டு உள் அலங்​காரத்தை வடிவ​மைக்க உதவும் அதிநவீனச் செய்​யறி​வுத் தளம்​தான் - IKEA Kreativ.

கணி​னிப் பார்வை (Computer Vision), இயந்​திரக் கற்​றல், இடம் சார்ந்த கணினி (Spatial Computing) தொழில்​நுட்​பங்​களைப் பயன்​படுத்தி, மெய்​நிகர் முறை​யில் (Virtual Interior Design) அறைகளை வடிவ​மைக்க இத்​தளம் உதவு​கிறது.

அறையை ஸ்​கேன் செய்து, தேவையற்​றவற்றை அழிப்​பது (Scene Scanner & Auto-Erase)

செய்​யறிவு ஸ்கேனர்​தான் IKEA Kreativ தளத்​தின் மிகப்​பெரிய சிறப்​பம்​சம். பயனர்​கள் தங்​கள் திறன்​பேசி கேமரா மூலம் அறையைப் படம் பிடிக்​கும்​போது, அது அந்த அறை​யின் முப்​பரிமாண அளவு​களை​யும் மூலைகளை​யும் துல்​லிய​மாகக் கணக்​கிட்​டுவிடு​கிறது. பின்​னர், அதிலுள்ள ‘Auto-Erase’ அம்​சம் அறை​யில் இருக்​கும் பழைய அறைக்​கலன்​களை நீக்கி, வெறும் அறையை மட்​டும் பயனருக்​குக் காட்டி அசத்து​கிறது.

மெய்​நிகர் அறைக்​கலன் பொருத்​தம் (3D Spatial Placement)

இக்​கருவி வழங்​கும் ஆயிரக்​கணக்​கான சோபாக்​கள், மேசைகள், விளக்​கு​கள் போன்ற அறைக்​கலன் மாதி​ரி​களை அந்த அறைக்​குள் நேரடி​யாகப் பொருத்​திப் பார்க்​கவும் முடியும். அறை​யின் அளவுக்​கும் வெளிச்​சத்​துக்​கும் (Scale & Lighting) ஏற்ப அப்​பொருள்​கள் சரியாகப் பொருந்​துகின்​றனவா என்​ப​தைக் காணவும் இந்​தத் தளத்​தில் வசதி​யுள்​ளது.

இயற்​கை​யான வெளிச்​சத்​துக்​கும் செயற்கை விளக்கு வெளிச்​சத்​துக்​கும் ஏற்ப அறைக்​கலன்​களின் நிழல்​களும் (Shadows) பிரதிபலிப்​பு​களும் எவ்​வாறு இருக்​கும் என்​ப​தைப் படம்​பி​டித்​துக் காட்​டும் தொழில்​நுட்​பமும் இதில் உள்​ளது. இயந்​திரக் கற்​றல் வழிமுறைகளைப் பயன்​படுத்தி, பயனர்​கள் தேர்ந்​தெடுக்​கும் அறைக்​கலன்​களுக்கு ஏற்ற பிற அலங்​காரப் பொருள்​களை​யும் திரைச்​சீலைகளை​யும் வண்​ணச் சேர்க்​கைகளை​யும் (Color & Style Combinations) இத்​தளம் பரிந்​துரைக்​கிறது.

3D ஷோரூம்​கள் (3D Showrooms)

தங்​களது அறையை ஸ்​கேன் செய்ய விரும்​பாதவர்​கள், இத்​தளத்​தில் ஆயத்த நிலை​யில் உள்ள நூற்​றுக்​கணக்​கான 3D மாதி​ரி​களில் (Interactive 3D) ஒன்​றைத் தேர்வு செய்து, தங்​கள் விருப்​பத்​துக்கு ஏற்​பப் பொருள்​களை மாற்றி அறையை வடிவ​மைத்​துப் பார்க்க முடியும். அறை​யில் பொருத்​தப்​பட்​டுள்ள அனைத்து IKEA பொருள்​களின் விலைப்​பட்​டியலை உடனே பெறும் வசதி​யும் இதில் உள்​ளது.

வடிவ​மைப்​பு​களைச் சேமித்​துப் பகிர்​தல் (Save & Share Designs)

பயனர்​கள் தாங்​கள் உரு​வாக்​கிய 3D வடிவ​மைப்பு மாதி​ரி​களைச் சேமித்து வைக்​கவும், குடும்ப உறுப்​பினர்​களு​டனும் உள்​ளரங்க வடிவ​மைப்​பாளர்​களு​டனும் எளிதாகப் பகிர்ந்​து​கொள்​ளவும், அவர்​களிடம் இருந்து கருத்​துகளைப் பெறவும் இதில் வசதி உண்டு.

பிற வடிவ​மைப்​புக் கரு​வி​களில் இருந்து இது எவ்​வாறு வேறு​படு​கிறது?

Traditional 2D Planners / Catalogs, வடிவ​மைப்​பு​களை வெறும் படங்​களாக மட்​டுமே பயனருக்​குக் காட்​டு​கின்​றன. குறிப்​பிட்ட ஓர் அறை​யின் பரிமாணத்​துக்கு ஏற்​பப் பொருள்​களை வைத்​தும், மாற்​றியும் பார்க்​கும் வசதி அவற்​றில் இருப்​ப​தில்லை. IKEA Kreativ கரு​வி​யில் அறையை 3D மேப்​பிங் செய்ய முடியும் என்​ப​துடன் பழைய பொருள்​களை நீக்கி, புதிய பொருள்​களை எளிதாகவும், துல்​லிய​மாகவும் பொருத்​திப் பார்க்க இயலும்.

யாருக்கு இது மிகவும் பயன்​படும்?

புதிதாக வீடு கட்​டுவோர், வீட்டை மறுசீரமைப்​போர், உள்​ளரங்க வடிவ​மைப்​பாளர்​கள். IKEA Kreativ கருவி செய்​யறி​வுத் தொழில்​நுட்​பத்​தின் துணை​யுடன் அறைகளின் உள் அலங்​காரத்தை வடிவ​மைக்​கும் அனுபவத்தை எளிதாகவும் சுவாரசி​ய​மானதாகவும் மாற்​றுகிறது.

https://www.ikea.com/in/en/planners/

செய்யறிவு விதி: செய்​யறிவு உங்​கள் சிந்​தனையைப் பதிலீடு செய்​வதற்கு ஒருபோதும் அனுமதிக்​காதீர்​கள். உங்​களு​டைய சுயசிந்​தனையை மேம்​படுத்​து​வதற்கு மட்​டுமே நீங்​கள் அதைப் பயன்​படுத்த வேண்​டும். ஆகவே மூலச்​சிந்​தனை எப்​போதும் உங்​களு​டைய​தாகவே இருக்கட்டும்.

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர்,

தொழில்​நுட்ப எழுத்​தாளர்.

வீட்டு உள் அலங்காரத்தை நாமே வடிவமைக்கலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 24
செய்யறிவு ஆராய்ச்சியை எளிதாக்கலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 23

X