செய்யறிவு ஆராய்ச்சியை எளிதாக்கலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 23

செய்யறிவு ஆராய்ச்சியை எளிதாக்கலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 23
Updated on: 
2 min read

தரவு அறி​வியல், இயந்​திரக் கற்றல் சார்ந்த செய்​யறிவு மாதி​ரி​களை உரு​வாக்​கு​வதற்கு உயர்​திறன் கொண்ட கணினி வன்​பொருள்​களும் GPU அமைப்​பு​களும் தேவை. அப்​படி​யான விலை​யுயர்ந்த கணி​னிகள் இல்​லாதவர்​களும் செய்​யறி​வுத்​துறை​யில் பணிகளை மேற்​கொள்ள Google Colab (Colaboratory) உதவு​கிறது.

வலை உலா​வி​யின் (Browser) துணை​யுடன் பைதன் குறியீடுகளை எழுதவும் அவற்றை மேகக்​கணி​னியகங்​களில் (Cloud) இயக்​கிப் பார்க்​கவும் இத்​தளம் வழிவகை செய்​கிறது.

கட்​ட​ணமில்லா வன்​பொருட்கள் (Free GPU & TPU Access)

Nvidia GPU (T4, V100), Google TPU (Tensor Processing Unit) போன்​றவற்றை இல​வச​மாக வழங்​கு​வதே கூகுள் கொலாப் தளத்​தின் மிகப்​பெரிய சிறப்​பம்​சம்.

இதன் மூலம் சிக்​கலான நரம்​பியல் வலைப்​பின்​னல்​களை​யும் (Neural Networks), ஆழ்​கற்​றல் மாதி​ரி​களை​யும் (Deep Learning Models) சாதா​ரண மடிக்​கணி​னி​யிலேயே வேக​மாகப் பயிற்​று​விக்க முடியும்.

நிறு​வல் இல்​லாத உலா​விச் சூழல் (Zero Configuration Needed)

கணி​னி​யில் பைதன் மென்​பொருளையோ, Pandas, NumPy, Scikit-Learn, PyTorch, TensorFlow போன்ற சிக்​கலான குறியீட்​டுத் தொகுப்​பு​களையோ நிறு​வத் தேவை​யில்லை. பிரபலமான தரவு அறி​வியல் தொகுப்​பு​கள் பல​வும் இத்​தளத்​தில் முன்​கூட்​டியே நிறு​வப்​பட்​டுத் தயார் நிலை​யில் இருப்​ப​தால், அவற்றை அப்​படியே பயன்​படுத்​திக்​கொள்​ளலாம்.

கூகுள் டிரைவ் ஒருங்​கிணைப்பு, நேரலைப் பகிர்வு (Google Drive Integration & Real-time Collaboration)

கொலாப் கோப்​பு​கள் (.ipynb / Jupyter Notebook Format) நேரடி​யாக கூகுள் டிரைவில் சேமிக்​கப்​படு​கின்​றன. இத​னால் பெரிய அளவி​லான தரவுத்​தொகுப்​பு​களை (Datasets) எளிதாகப் பதிவேற்​றவும் எந்​தவொரு கணி​னி​யில் இருந்​தும் அவற்​றைத் தடை​யின்​றிப் பயன்​படுத்​தவும் முடியும்.

கூகுள் டாக்ஸ் (Google Docs) போலவே கொலாப் நோட்​புக்​கு​களை​யும் சக மாணவர்​களு​டனோ ஆராய்ச்​சி​யாளர்​களு​டனோ பகிர்ந்​து​கொண்டு இணைந்து பணி​யாற்​றலாம். பயனர்​கள் தங்​களு​டைய கருத்​துகளைச் (Comments) சேர்க்​கும் வசதி​யும் இதிலுள்​ளது.

ஒருங்​கிணைக்​கப்​பட்ட செய்​யறி​வுக் குறியீட்டு உதவி (Integrated AI Coding Assistant)

கூகுளின் செய்​யறி​வுத் தளமான ஜெமி​னி​யின் உதவியை இந்​தக் கரு​வி​யில் இருந்தே பெறும் வசதி​யுள்​ளது. ஆகவே, பயனாளர்​களால் எளி​தில் குறியீடுகளை உரு​வாக்​கவும் பூர்த்தி செய்​ய​வும் (Code Completion) பிழைகளைத் திருத்​தவும் (Debugging) முடி​கிறது.

ஹிட்​ஹப் நேரடி ஒருங்​கிணைப்பு (GitHub Integration)

ஆராய்ச்​சி​யாளர்​கள் தங்​கள் குறியீடுகளை நேரடி​யாக ஹிட்​ஹப் (GitHub Repository) தளத்​தில் இருந்து பதி​விறக்​கம் செய்து இயக்​கவும், புதிய ஆய்​வறிக்​கைகளின் மாதி​ரி​களைத் தடை​யின்​றிச் சேமித்து வெளி​யிட​வும் இக்​கருவி அனுமதிக்​கிறது.

பிற கரு​வி​களில் இருந்து இது எவ்​வாறு வேறு​படு​கிறது?

Local Jupyter Notebook / VS Code போன்ற தளங்​கள் நம்​முடைய கணி​னி​யில் இருக்​கும் வன்​பொருளைச் (Local Hardware) சார்ந்தே இயங்​கு​கின்​றன. ஆகவே மேம்​பட்ட GPU வசதி​களைப் பெற​வேண்டு​மெனில் அதற்கு அதிக அளவில் பணத்​தைச் செல​விட வேண்​டியதிருக்​கும். Google Colab கரு​வி​யிலோ சக்​திவாய்ந்த GPU வசதி​களு​டன், தானியங்கு செய்​யறிவு வழிகாட்​டலை​யும் மேகக்​கணி​னியகத்​தி​லிருந்து நாம் இல​வச​மாகப் பெற்​றுக்​கொள்ள இயலும்.

யாருக்கு இது மிகவும் பயன்​படும்?

தரவு அறி​வியல் மாணவர்​கள், செய்​யறிவு ஆராய்ச்​சி​யாளர்​கள், பேராசி​ரியர்​கள், மென்​பொருள் பொறி​யாளர்​கள், ஆழ்​கற்​றல் மாதி​ரி​களைப் பயிற்​று​விப்​போர்.

ஆராய்ச்சி பணிகளி​லும் கல்​விப்​புலத்​திலும் நில​வும் வன்​பொருள் சார்ந்த சவால்​களை முறியடித்து, செய்​யறி​வுக் கற்​றலை அனைவருக்குமான ஒன்​றாக மாற்​று​வதில் Google Colab கரு​வி​யின் பங்கு இன்​றியமையாதது.

https://colab.research.google.com/

செய்யறிவு விதி: செய்​யறிவு தரும் குறியீட்டை அப்​படியே நகலெடுக்​காமல் அவற்​றின் பின்​னுள்ள தர்க்​கத்​தைப் புரிந்​து​கொள்​ளுங்​கள். அல்​காரிதம் எவ்​வாறு இயங்​கு​கிறது என்​ப​தைக் கற்​றுக்​கொள்​வது முக்​கியம். லாஜிக் புரிந்​தால்​தான் நீங்​கள் திறன்​மிக்க புரோகிராமர் ஆக முடியும்.

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர்,

தொழில்​நுட்ப எழுத்​தாளர்.

செய்யறிவு ஆராய்ச்சியை எளிதாக்கலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 23
படம் பிடித்​தால் பெயர் சொல்லும் | எளிதில் கற்கலாம் ஏஐ 22

X