முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட்டை ஒப்படைக்க ஸ்ரீவில்லி. நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட்டை ஒப்படைக்க ஸ்ரீவில்லி. நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

ஶ்ரீவில்லிபுத்தூர்: அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் நீதிமன்ற அனுமதி இன்றி வெளிநாடு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் அவரது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள உட்பட 8 பேர் மீது விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் இரு வழக்குகள் பதிவு செய்தனர்.

இந்த இரு வழக்குகளிலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த இரு வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் தாக்கல் செய்த விடுவிப்பு மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, செப்டம்பர் 2-ம் தேதி குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தியதால் தனது பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான வழக்கில் இன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கந்தகுமார் உத்தரவிட்டார். இதனிடையே, ஆவின் முறைகேடு வழக்கு செப்டம்பர் 17-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட்டை ஒப்படைக்க ஸ்ரீவில்லி. நீதிமன்றம் உத்தரவு
சென்னை சென்ட்ரலில் மூதாட்டியிடம் செயின் திருட்டு: கர்நாடகாவை சேர்ந்த 2 பெண்கள் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in