பாரதி ஆனந்த்

என்னை ஒரு முதல் தலைமுறை பட்டதாரி, ஊடகவியலாளர் ஆக்கியதும், எனக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தை தந்ததும் கல்வியே. இப்போது ‘இந்து தமிழ் திசை இணையதளப் பிரிவில்’ Chief Sub Editor ஆக இருக்கிறேன். 2008-ல் தொடங்கிய ஊடகப் பயணத்தில் நான் கற்றதும் பெற்றதும் ஏராளம். ‘ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர், மாநில, தேசிய அரசியல், சமூக விழிப்புணர்வுக் கட்டுரைகளை செம்மையாக எழுதுபவர், உலக நடப்புகளை தெளிவுப் பார்வையுடன் கூடிய செய்திக் கட்டுரைகளாக வழங்குபவர்’ என்ற அடையாளம் எனக்கு உண்டு. குறிப்பாக, மனிதர்களைப் பற்றி, அவர்களின் வெற்றி, தோல்விகள், அவர்களின் கண்ணீர், உரிமைக் குரல்களை பதிவதில் கவனம் செலுத்துகிறேன். இதனை அங்கீகரித்துதான், 2023-ல் ‘அக்கினிச் சிறகுகள்’ விருது எனக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து Digital Journalism-ல் நேர்த்தியும் புலமையும் மிக்க செய்தி ஊடகவியலாளராக உத்வேகத்துடன் வலம் வருகிறேன்.
Connect:
பாரதி ஆனந்த்
Read More
Hindu Tamil Thisai
www.hindutamil.in